திருமறை அறிஞர் Dr.A.கிறிஸ்டோபர் அவர்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்தில் நன்கு அறிமுகமான சிறந்த வேத பண்டிதரும், எழுத்தாளருமாவார் .
நகைச்சுவை உணர்வோடு அதே வேளையில் ஆவிக்குரிய சாரம் கொஞ்சமும் குறையாமல் பிரசங்கிக்கும் சிறந்த அருளுரையாளர். எளிய நடையில் ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை எடுத்துரைக்கும் கிருபை பெற்றவர். இவரது புத்தகங்களை வாசிக்கும் போது இவரே நேரில் பேசுவது போன்ற ஒரு உணர்வு உண்டாகும். இவரது புத்தகங்கள் உலகத்தின் பல பாகங்களில் உள்ள பலதரப்பட்ட மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆவிக்குரிய தாக்கத்தை உண்டாக்கி வருகின்றது .
அநேக ஊழியர்களை உருவாக்க கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட கனத்திற்குரிய தேவமனிதர். பல ஊழியர்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாகவும் ஆலோசகராகவும் இருந்தவர் .
நீங்கள் வாசிக்கும் இந்த புத்தகங்கள் உங்கள் வாழ்வில் தெய்வீக கிரியைகளை நடப்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படிக்க இயலாதோருக்காகவும் பார்வையற்றோருக்காகவும் இவரது புத்தகங்கள் ஆடியோ வடிவில் வெளியிட முயற்சிக்கிறோம். இந்த பணி நிறைவேற ஜெபியுங்கள் தாங்குங்கள் .
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .Thirumarai Arignar Apostle Dr. A. Christopher is a well-known biblical scholar in the Tamil Christian world and a widely recognized Christian author
He was a dynamic preacher and preached the word of God with humor but without lacking any of the deeper spiritual essence. Though he was a Biblical scholar and Bible teacher he used simple language to express and explain the sound Christian doctrine. It seems like he is speaking in person when we begin to read his books. His books bring forth great spiritual revival among numerous people from various parts of the world.
He was a chosen and honorable vessel of God to raise, mould and lead many to serve God Almighty. Among those many are now serving God victoriously. He was a spiritual father and a best counselor to many.
These books when you read will definitely bring divine blessings without any doubt. We are trying to publish his books in audio form to encourage those who cannot read Tamil and to those who are visually impaired and visually disabled.
Do remember to pray for the completion of this mission. Uphold the ministry by your prayers and financial support. May God bless.